இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி - சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து|சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா. – Tamil Sports News

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா.

 


 

இலங்கைக்கு எதிரான 2வது டுவென்டி-20 கிரிக்கெட்டில் 88 ரன்னில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. 43 பந்துகள் பிடித்த இவர் 10 சிக்ஸ்களும், 12 பவுண்டரிகளும் அடித்து 118 ரன்கள் எடுத்தார். அதேபோல் லோகேஷ் ராகுல் 49 பந்தில் 8 சிக்ஸ் அடித்து 89 ரன் எடுத்தார்.

 

டி-20 போட்டியில் இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும் இது.இதற்கு முன்பு 2016ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா 244 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

261 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடி இலங்கை அணி 17.2 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...