இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி - சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து|சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா
ஊக்கமருந்து விவகாரம் : யூசப் பதானுக்கு 5 மாதம் தடை – Tamil Sports News

ஊக்கமருந்து விவகாரம் : யூசப் பதானுக்கு 5 மாதம் தடை

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் 5 மாதங்களுக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை

கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் பரோடா அணிக்காக பதான் ஆடிய போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தான Terbutaline அவரது உடலில் இருந்தது கண்டறியப்பட்டது. பதான் உட்கொண்ட இருமல் மருந்தான Brozeet -ல் Terbutaline உட்பொருளாக உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் முன்அனுமதியின்றி இந்த மருந்தை எடுத்துக் கொள்ள முடியாது.

இது தொடர்பாக யூசூப் பதான் அளித்த விளக்கத்தை பி.சி.சி.ஐ. ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் அவரை ரஞ்சி தொடருக்கு தேர்வு செய்ய வேண்டாம் என பரோடா அணிக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளது. இந்த புகாரில் சிக்கும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் ஆவார். 2012ம் ஆண்டில் டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிரதீப் சங்வான் Terbutaline பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் அவருக்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதிலிருந்து யூசப் பதானுக்க்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஐபிஎல்லில் விளையாட யூசப் பதானுக்கு சிக்கல் ஏதும் இருக்காது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...