சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா|யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி
பிபா யு-17 உலக கோப்பை : மாலி அணி அரை இறுதிக்கு தகுதி – Tamil Sports News

பிபா யு-17 உலக கோப்பை : மாலி அணி அரை இறுதிக்கு தகுதி

பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட, மாலி அணி தகுதி பெற்றுள்ளது.

கவுகாத்தி, இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கால் இறுதியில் கானா – மாலி அணிகள் மோதின. தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாலி அணி வீரர்கள், கானா கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஹட்ஜி டிரேம் அபாரமாக கோல் அடிக்க மாலி அணி 1-0 என முன்னிலை பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய மாலி அணிக்கு, 61வது நிமிடத்தில் டெமூஸா டிரயோர் கோல் அடித்து 2-0 என முன்னிலையை அதிகரித்தார். இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய கானா அணிக்கு, 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் குதுஸ் முகமது கோல் போட்டார். கடைசி கட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் மாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் – ஈரான் அணிகளிடையே இன்று நடைபெறும் கால் இறுதியில் வெற்றி பெறும் அணியை மாலி அரை இறுதியில் சந்திக்கிறது. கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 2வது கால் இறுதியில் இங்கிலாந்து 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...