சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா|யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி
புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி – Tamil Sports News

புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி

சென்னை:

5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து, நேற்று புனே சுற்று ஆட்டங்கள் தொடங்கின.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. தமிழ் தலைவாஸ் அணி, இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

இப்போட்டியில் முதல் பாதியின் 18-14 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னிலை வகித்தது. அதைத்தொடர்ந்து நடந்த இராண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டின.

இருப்பினும் முடிவில் 34-30 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 14 தொடுபுள்ளிகள் எடுத்த தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர், ஒரே சிசனில் 200 புள்ளிகளை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார். தமிழ் தலைவாஸ் அணி, 14-வது போட்டியில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்டன் – குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 44-20 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. குஜராத் அணியின் சுகேஷ் ஹெக்தே அதிகபட்சமாக 15 தொடுபுள்ளிகள் எடுத்தார்.

இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி 82 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், புனேரி பால்டன் அணி 63 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ‘பீ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ் அணி 74 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி 41 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன.

இன்று (14-ம் தேதி), நடைபெறும் லீக் போட்டிகளில் புனேரி பால்டன் – யூ மும்பா, தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...