3-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி|200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ?|ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி|அனில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்கினாலே ஓய்வு பெற்று விடுவேன்|ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி|200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி|நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி|தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி.|இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி|புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி
நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி – Tamil Sports News

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி

 

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றதால், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக உள்ளனர்.

தவான் அணிக்கு திரும்பியுள்ளதும், நடுவரிசையில் டோனி களமிறங்குவதும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. புவனேஷ்வர், பூம்ரா வேகமும், குல்தீப் யாதவ் – யஜுவேந்திர சாஹல் சுழல் கூட்டணியும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம். அதே சமயம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை அலட்சியப்படுத்த முடியாது. அந்த அணியிலும் மார்டின் கப்தி, ராஸ் டெய்லர், கோலின் மன்றோ, டாம் லதாம் என்று அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும். வாரியத் தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் டெய்லர், லதாம் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் டிம் சவுத்தீ, டிரென்ட் போல்ட் இருவரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். சான்ட்னர் – சோதி சுழல் கூட்டணி எடுபட்டால் மட்டுமே இந்தியா பெரிய ஸ்கோர் அடிப்பதை கட்டுப்படுத்த முடியும். இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் உறுதியுடன் களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். ஐசிசி புதிதாக அறிமுகம் செய்துள்ள விதிமுறைகள் அமலான பிறகு இந்தியா சந்திக்கும் முதல் ஒருநாள் தொடர் இது.
ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி, நியூசி.க்கு எதிரான தொடரில் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தால் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...