3-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி|200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ?|ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி|அனில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்கினாலே ஓய்வு பெற்று விடுவேன்|ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி|200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி|நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி|தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி.|இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி|புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி
டென்மார்க் ஓபன் பேட்மின்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்கிடாம்பி : ஓரே ஆண்டில் தொடர்ந்து 3 சூப்பர் சீரிஸ் பட்டங்கள் வென்று சாதனை – Tamil Sports News

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்கிடாம்பி : ஓரே ஆண்டில் தொடர்ந்து 3 சூப்பர் சீரிஸ் பட்டங்கள் வென்று சாதனை

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான சாய்னா, பிவி சிந்து, பிரன்னாய் ஆகியோர் காலிறுதியில்

தோல்வியடைந்து ஏமாற்றமளித்த நிலையில் ஸ்ரீகாந்த் கிடாம்பி டென்மார்க் ஓபன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்

ஞாயிறு மாலை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கொரியாவின் லீ ஹன்,  இந்தியாவின ஸ்ரீகாந்த் கிடாம்பி மோதினர். துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-10 என்ற செட் கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றி லீ ஹன்ஐ துவம்சம் செய்தார்.    தொடர்ந்து தனது மின்னல் வேக ஆட்டத்தின் மூலம் லீ ஹன்னிற்கு துளியளவும் வாய்ப்பளிக்காமல் 21-5 என்றபுள்ளி கணக்கில் இரண்டவது சுற்றை அதிரடியாக கைப்பற்றி டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்ரீகாந்த் கிடாம்பி.

இந்த வெற்றியின் மூலம் 2017-ம் ஆண்டில் 3 சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றமுதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார். இதற்கு முன்

மகளிர் பிரிவில் சாய்னா நேவால்  ஒரே ஆண்டில் தொடர்ந்து 3 சூப்பர் சீரிஸ்பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்மிண்டன் வரலாற்றில் ஓற்றையர் பிரிவு இறுதிச்சுற்று இறுதிபோட்டியில் நான்கு முறை சென்ற 6-வது வீரர் என்ற சாதனையையும் ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.

வெற்றியை தொடர்ந்து பரிசுத்தொகையான 36 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு வழங்கப்பட்டது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...