3-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி|200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ?|ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி|அனில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்கினாலே ஓய்வு பெற்று விடுவேன்|ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி|200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி|நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி|தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி.|இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி|புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி
சீனாவின் சாதனையை முறியடிக்குமா இந்தியா ? – Tamil Sports News

சீனாவின் சாதனையை முறியடிக்குமா இந்தியா ?

இந்தியாவில் நடைபெற்று வரும் இளையோர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை 10 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து ரசித்துள்ளனர்.

இந்தியாவில் முதன்முறையாக பிஃபா நடத்தும் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லி, கொல்கத்தா, கோவா, கேரளாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கிரிக்கெட் போட்டியில் மூழ்கி இருக்கும் இந்திய ரசிகர்கள், கால்பந்திற்கு ஆதரவு கொடுப்பார்களா? என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரையிலான போட்டிகளை 10 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து ரசித்து அமோக வரவேற்பு அளித்துள்ளது இந்திய கால்பந்து சம்மேளனத்தையே சற்று திக்குமுக்காடச்செய்துள்ளது.

இதுவரை 17 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியை 10 லட்சத்து 7 ஆயிரத்து 396 பேர் ரசித்துள்ளனர். இன்னும் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 1985-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற தொடரை 12 லட்சத்து 30 ஆயிரத்து 976 ரசிகர்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இந்தியா முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...