3-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி|200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ?|ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி|அனில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்கினாலே ஓய்வு பெற்று விடுவேன்|ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி|200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி|நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி|தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி.|இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி|புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி
ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி – Tamil Sports News

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் சூப்பர் 4 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வங்கதேசத்தில் நடந்து வரும் இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டிரா செய்தாலே பைனலுக்கு முன்னேற முடியும் என்ற சாதகமான நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, பாகிஸ்தான் வீரர்கள் ஈடுகொடுத்து விளையாடியதால் இடைவேளை வரை கோல் ஏதும் விழாமல் 0-0 என சமநிலை நிலவியது.

மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பந்தை துடிப்பாக கடத்திச் சென்று நெருக்கடி கொடுத்த இந்திய அணிக்கு, 39வது நிமிடத்தில் சத்பிர் சிங் கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஹர்மான்பிரீத் சிங் (51வது நிமிடம்), லலித் உபாத்யாய் (52வது நிமிடம்), குர்ஜந்த் சிங் (57வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இந்திய வீரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி ஸ்தம்பித்து நின்றது. ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்தியா, சூப்பர் 4 சுற்றில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கம்பீரமாக பைனலுக்கு முன்னேறியது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...